தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 18 பேர் மரணம்..

சென்னை: சுகாதாரத்துறை ஜுன் 7ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த 18 பேரில் 15 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் 18 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது. இந்த 269ல் 212 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். செங்கல்பட்டில் 15 பேர், திருவள்ளூரில் 12 பேர், காஞ்சிபுரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 243 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.