உணவகத்துக்கு உள்ளேயும் சமூக விலகல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தையும், அதே நேரத்தில் அச்சத்தையும் தந்துள்ளது.


நேற்று(ஜூன் 7) ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் மீண்டும் உணவு விடுதிகளும், சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டால் கொரோனா வைரஸ் அதிக அளவு பாதிப்புகளை ஏற்படுத்துமா என்னும் அச்சம் அனைவருக்கும் இருக்கிறது.


              அதேநேரத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக அனைத்து தொழில்களும் முடங்கிப்போய் இருக்கும் நிலையில் அவர்களது வருமானத்தை மீட்டெடுத்து, மீண்டும் வாழ்க்கையைத் துவங்குவதற்கு வழி வேண்டுமே என்ற எண்ணமும் ஏற்படுகிறது. எனவே பொது மக்களுக்கு அச்சம் ஏற்படாத வகையிலும் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகவும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தளர்வுகள் விதிக்கப்பட்ட இடங்களை மீண்டும் இயங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.


அந்த வகையில் அலுவலகம் ஒன்றின் விடுதியில் கையாளப்பட்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கை அனைவரையும் கவர்வதாக உள்ளது. இது தொடர்பான வீடியோ டிக் டாக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.