கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ள சென்னையில், திருப்பதி லட்டு வாங்குவதற்காக மக்கள் கூட்டம் கூடியதாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டன. வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், சபரிமலை, திருப்பதி தேவஸ்தானம், ஷீரடி சாய்பாபா ஆகிய கோயில்களில் பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.
பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து திருப்பதி கோயில் நிர்வாகத்துக்கு சுமார் 400 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது. இழப்பை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளைக் கோயில் நிர்வாகம் மேற்கொண்டது. இந்நிலையில், புகழ் பெற்ற மற்றும் தனி சுவை கொண்ட பிரசாதமான திருப்பதி லட்டுவை மானிய விலையில் விற்க முடிவு செய்தது. ஐதராபாத், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லட்டுகளை மானிய விலையில் விற்கத் திட்டமிட்ட நிலையில் முதற்கட்டமாக மே 25ஆம் தேதி ஆந்திராவில் லட்டு விற்பனை தொடங்கியது.